×

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா

 

ஜெயங்கொண்டம். மார்ச் 1: அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன் 1930 ம் ஆண்டில் இராமன் விளைவு கண்டுபிடித்த பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது. தலைமையாசிரியை முல்லைக்கொடி ஆலோசனைப்படி உதவி தலைமையாசிரியர் (பொ) இங்கர்சால் தலைமை வகித்தார். ஆசிரியர் இராஜசேகரன் வரவேற்றார். செல்வராஜ், இரகுபதி, சாந்தி, மஞ்சுளா, தமிழரசி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அறிவியல் ஆசிரியர் தமிழ்வாணன் கலந்து கொண்டு அறிவியலின் விந்தை என்ற தலைப்பில் பேசினார், மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிம்மவாகினி, சுவேதாவிற்கு கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் பற்றி மாணவி இந்துஜா பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாவை சங்கர், தமிழாசிரியர் இராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா, சங்கீதா, மாரியம்மாள், சுரும்பார்குழலி, காவேரி, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியர் அருட்செல்வி நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா appeared first on Dinakaran.

Tags : National Science Day ,Govt ,Girls Higher Secondary School ,Udayarpalayam ,Jayangondam ,CV ,Raman ,Science Day ,Udayarpalayam Government Girls Higher Secondary School ,Government Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது