×

கோவை மாநகரில் ரூ.1.01 கோடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை வளாகம்

 

கோவை, மார்ச் 1: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 46-வது வார்டுக்கு உட்பட்ட ரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவை வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, இம்மையத்தை திறந்துவைத்தார்.

இந்த வளாகத்தில் மொத்தம் 6 மையங்கள் உள்னள. இதன் வாயிலாக, ரத்தினபுரி, கணபதி, நஞ்சப்பன் வீதி, சாயிபாபாகாலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 120 குழந்தைகள் பயன்பெறுகின்றன. திறப்பு விழாவில், எல் அண்ட் டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாகி ரவி கட்டாரியா, நிர்வாக தலைவர் அமுல்கேத்திரா, ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவைகள் மாவட்ட திட்ட அலுவலர் முருகேஸ்வரி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் கவிதா பப்பி, ஆண்டாள், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post கோவை மாநகரில் ரூ.1.01 கோடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை வளாகம் appeared first on Dinakaran.

Tags : Integrated Child Development Services Complex ,Coimbatore ,Integrated Child Development Service Complex ,Ratnapuri, Ganapathi Nanjapan Road ,Ward 46 ,Central Zone ,Coimbatore Corporation ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...