×

கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தினமும் 100 நாள் வேலை தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர்,மார்ச் 1: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஊனம்பட்டி பகுதியில் கால்நடை முகாம் நடத்த வேண்டும். தென்னிலை பகுதியில் பட்டா மாற்றம் மற்றும் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும். புகளுர் பகுதியில் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். அரவக்குறிச்சி பகுதி பெரிய மஞ்சுவெளி பகுதியில் நீர் பாசனம் மற்றும் இடது புறமாக வாய்க்கால் தூர்வார வேண்டும், ராயனூர் பகுதியில் பாசன வாய்க்கால் இருபுறமும் தூர்வார வேண்டும். குளித்தலை பகுதியில் அய்யர்மலை முதல் திம்மம்பட்டி வரை செல்லும் சாலையில் பள்ளி எதிரே உள்ள பெரிய வேகத்தடையை சரி செய்து சிறிய வேக தடையாக அமைக்க வேண்டும், குளித்தலை பகுதி மருதூர் விவசாயிகளுக்கு நில பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும் என்றனர். மேலும் உள்வீரராக்கியம் பகுதியில் பொதுமக்களுக்கு தினமும் 100 நாள் வேலை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் அமராவதி ஆற்றின் இரு பகுதியிலும் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நங்கவரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

The post கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தினமும் 100 நாள் வேலை தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Farmers' Grievance ,Karur ,Farmers' Grievance Day ,Collector ,Thangavel ,Unampatti ,Patta ,Tennilai ,Dinakaran ,
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்