×

கோயம்பள்ளி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கரூர், மார்ச் 1: கோயம்பள்ளி கிராமத்தில் 40 லட்ச

ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கால்நடை மருந்தகத்தில் குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன், தாந்தோணி ஒன்றிய சேர்மன் சிவகாமி வேலுச்சாமி, கோயம்பள்ளி ஊராட்சி தலைவர் வசந்தி மயில்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கண்ணையன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி, கால்நடை உதவி மருத்துவர் காவ்யா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோயம்பள்ளி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கரூர், மார்ச் 1: கோயம்பள்ளி கிராமத்தில் 40 லட்ச appeared first on Dinakaran.

Tags : Veterinary Hospital ,Koyambally village ,Karur ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Krishnarayapuram Assembly ,Sivakamasundari ,Western Union ,Koyambally Village Veterinary Hospital ,
× RELATED கோவில்பட்டியில் வெறி நோய் தடுப்பூசி முகாம்