×

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் ₹4 கோடியில் கதிரியக்க சிகிச்சை மையம் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

நாகர்கோவில், மார்ச் 1: மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோபால்ட்-60 டெலிதெரபி கருவியுடன் கூடிய கதிரியக்க சிகிச்சை மையம் ₹4 கோடியில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துெகாண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மேயர் மகேஷ், கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹27.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட நோயாளிகள் உடனிருப்போர் காத்திருப்போர் அறை, ₹19.14 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட உயர் சிறப்பு அதிதீவிர சிகிச்சை பிரிவு வார்டு, ₹17 லட்சம் மதிப்பில் குருதி உறைதல் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, கவுன்சிலர்கள் மோனிகா, அமலசெல்வன், தங்கராஜா, ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப்சென், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள், டாக்டர்கள் சுரேஷ் பாலன், கிங்சிலி, சேதுராமன், திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் ₹4 கோடியில் கதிரியக்க சிகிச்சை மையம் அமைச்சர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Radiotherapy Center ,Asaripallam Medical College ,Nagercoil ,Asaripallam Medical College Hospital ,Department of Public Welfare ,Radiotherapy ,Center ,Dinakaran ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...