×

கோம்பை மலையடிவாரத்தில் குறைந்துபோன காட்டு தக்காளி விவசாயம்

தேவாரம், மார்ச் 1: கோம்பை மலையடிவாரத்தில், காட்டு தக்காளி விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரத்தை ஒட்டிய மலையடிவார பகுதிகளில் உள்ள நிலங்களில் மானாவாரியாக காட்டு தக்காளி பயிரிடப்படுவது வழக்கம். காட்டு தக்காளிக்கு, தண்ணீர் தோட்டங்களில் இருந்து பாய்ச்சுவது கிடையாது. இயற்கையாகவே, மழை பெய்யும் போது, கிடைக்கக்கூடிய தண்ணீரில் இது தானாகவே விளைந்து விடும்.

இதனால் விவசாயிகள் மலையடிவாரங்களில், தக்காளி நாற்றுகளை நடவு செய்வது வழக்கம். தற்போது அந்தப் பகுதிகளில் நாட்டு தக்காளி விவசாயம் படிப்படியாக குறைந்து விட்டது. பருவம் தவறிய மழை காரணமாக காட்டு தக்காளியை நம்பி பயிரிட முடியாத நிலை உள்ளது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்களில் பெருமளவில் காட்டு தக்காளி விவசாயத்தை தவிர்த்து, மாற்று விவசாயமாக, அவரை, கரும்பு, கம்பு, சோளம் உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் காட்டு தக்காளி விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 100 ஏக்கர் அளவுக்கு கூட காட்டு தக்காளி பயிரிடப்படுவது இல்லை. சந்தையில் காட்டு தக்காளிக்கு கிராக்கி இருந்தும் அதனை விளைவிக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

The post கோம்பை மலையடிவாரத்தில் குறைந்துபோன காட்டு தக்காளி விவசாயம் appeared first on Dinakaran.

Tags : Gombai ,Devaram ,Theni district ,Pannapuram ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...