×

பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுடையோருக்கு திறன் பேசி வழங்க நாளை நேர்முக தேர்வு: திண்டுக்கல்லில் நடக்கிறது

 

திண்டுக்கல், மார்ச் 1: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-2024ம் நிதியாண்டுக்கு, பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு திறன் பேசி வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மார்ச் 2ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே 18 வயது முதல் 70 வயது வரை பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் இந்நாள் வரை திறன் பேசி பெறாத நபர்கள் தங்களுடைய மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை அசல், நகல், ஆதார் அட்டை அசல், நகல், பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி சான்று, பணிபுரிபவர் பணிபுரிவதற்கான சான்று, சுயதொழில் புரிவதற்கான (VAO)- சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2 ஆகியவற்றோடு இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுடையோருக்கு திறன் பேசி வழங்க நாளை நேர்முக தேர்வு: திண்டுக்கல்லில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,District Collector ,Boongodi ,Dindigul district ,District Disabled Welfare Office ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...