×

அரசாணை வெளியீடு பள்ளி மேலாண்மைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கடந்த 2022ம் ஆண்டு பள்ளி மேலாண்மைக் குழு நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2024 ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதங்களில் முடிய உள்ள நிலையில் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை ஆகஸ்ட் வரை நீட்டித்து ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளில் உறுப்பினர் செயலர் அரசைக் கேட்டுக் கொண்டார். உறுப்பினர் செயலரின் கருத்துருவை ஏற்று 2024-25ம் கல்வியாண்டில் புதிதாக சேரும் மாணவர்களின் பெற்றோரையும் உள்ளடக்கிய பள்ளி மேலாண்மைக்குழுவை அமைக்கும் வகையில் தமிழ்நாடு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் தளர்வு செய்து 2022-24ம் ஆண்டு காலத்தில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.

இதன்படி, நடுநிலைப் பள்ளிகளில் 23.4.2022 தேதியின்படி 2024 ஜூலை 3வது வாரம் வரையில் உள்ள பதவிக் காலம் 24.4.2024 முதல் 20.7.2024 வரையும், 50 சதவீத தொடக்கப் பள்ளிகளில் உள்ள குழுக்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் 1.5.2024ம் தேதி முதல் 27.7.2024ம் தேதி வரையும், மீதம் உள்ள 50 சதவீத தொடக்கப் பள்ளிகளின் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் மே 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளின் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 17 வரையும் நீட்டிக்கப்படுகிறது. மேலும், 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2024-26ம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மாநில மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசாணை வெளியீடு பள்ளி மேலாண்மைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : School Management Committee ,Chennai ,School ,Kumaraguruparan ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி