×

பழைய ஓய்வூதிய திட்டம் மே 1 முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் மே 1 முதல் நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்தப்போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு கன்வீனர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில்,’ புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட உத்திரவாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால் எங்கள் கோரிக்கையை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. எனவே எங்கள் கோரிக்கையை மீட்டெடுக்க இப்போது நேரடி நடவடிக்கையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நாடு முழுவதும் மே 1 முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும்’ என்றார். பொதுச்செயலாளரான மிஸ்ரா கூறுகையில், ‘ நாடு தழுவிய வேலைநிறுத்தம் குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு மார்ச் 19 அன்று அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்புவோம் என்று பல்வேறு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர். அனைத்து ரயில் சேவைகளும் மே 1 முதல் நிச்சயம் நிறுத்தப்படும்’ என்றார்.

The post பழைய ஓய்வூதிய திட்டம் மே 1 முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Union government ,Unions ,Dinakaran ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...