×

ரஷ்யாவின் தேசிய ஒற்றுமை பாராட்டுக்குரியது: அதிபர் புடின் பெருமிதம்

மாஸ்கோ: ரஷ்யாவில் வருகிற 15-17 தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் அவர் இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவருக்கு எதிராக சவால்விடக்கூடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது வெளிநாடுகளில் வசிக்கின்றனர். மீண்டும் அதிபராக புதின் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக கூறலாம். இந்நிலையில் எம்பிக்கள், அரசு அதிகாரிகளிடையே உரையாற்றிய அதிபர் புடின்,‘‘உக்ரைனில் ரஷ்யா தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு, நமது நாட்டை சேர்ந்தவர்களை பாதுகாத்து வருகின்றது. ரஷ்யாவின் தேசிய ஒற்றுமையை பாராட்டுகிறேன். ரஷ்ய வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரஷ்யாவின் நலன்களை பாதுகாக்கவும், நேட்டோவில் இணைவதன் மூலமாக ரஷ்யாவிற்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை தடுப்பதற்காகவே உக்ரைனுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது” என்றார்.

The post ரஷ்யாவின் தேசிய ஒற்றுமை பாராட்டுக்குரியது: அதிபர் புடின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Russia ,President ,Putin ,Moscow ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...