×

வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.210.75 கோடி செலவில் வேளாண் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வேளா ண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.210.75 கோடி செலவில் வேளாண் கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்,கடந்த ஆண்டு ஆக.15ம் தேதி சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையில், சென்னையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைக்கப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு அவர் நேற்று அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் – அம்பத்தூரில் 5000 மெ.டன், செங்குன்றத்தில் 2000 மெ.டன், சேலத்தில் 1000 மெ.டன், கோயம்புத்தூர் மாவட்டம் – சூலூரில் 5000 மெ.டன், தூத்துக்குடியில் 2000 மெ.டன், திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 6 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாழை ஏலம் மற்றும் மதிப்புக்கூட்டு மையம், திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு, மதுரை மாவட்டம் – கொட்டாம்பட்டி, சிவகங்கை மாவட்டம் – இளையாங்குடி, ஈரோடு மாவட்டம் – கோபிச்செட்டிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் – சத்திரக்குடி மற்றும் நயினார்கோயில், விழுப்புரம் மாவட்டம் – முகையூர், நாகப்பட்டினம் மாவட்டம் – கீழ்வேளூர் மற்றும் கீழையூர், அரியலூர் மாவட்டம் – செந்துறை,

திருவண்ணாமலை மாவட்டம்- கீழ்பென்னாத்தூர், அனக்காவூர் மற்றும் பெரணமல்லூர், நாமக்கல் மாவட்டம் – எலச்சிப்பாளையம், தஞ்சாவூர் மாவட்டம்- திருவையாறு ஆகிய இடங்களில் 38 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் வேளாண் பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடங்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் செயல்விளக்க பூங்காவில் 1 கோடியே 74 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திசுவளர்ப்பு ஆய்வகம் மற்றும் தங்கும் விடுதி; என மொத்தம் 210 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* நம்மாழ்வார் விருது வழங்குதல்
வேளாண்மை – உழவர் நலத்துறையின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற உயிர்ம விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ”நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் – தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தருக்கு முதல் பரிசாக 2.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கு இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலனுக்கு மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

The post வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.210.75 கோடி செலவில் வேளாண் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Agriculture - Farmers Welfare Department ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Department of Agriculture and Farmers' Welfare ,Tamil Nadu ,M.K. Stalin ,Independence Day ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...