×
Saravana Stores

நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 70 அப்பாவி மக்கள் பலி, 280 பேர் படுகாயம்

ரஃபா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் 4 மாதங்களை கடந்தும் இன்னும் ஓயவில்லை. இந்த போரில் காசாவின் பெரும்பாலான பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன. இதுவரை 30,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை விட்டு வௌியேறி அகதிகளாக அலைந்து வருகின்றனர்.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மனிதாபிமானமற்ற முறையில் பல்முனை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று தெற்கு காசாவில் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனியர்கள் வரிசையில் காத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 280 பேர் படுகாயமடைந்தனர்.

The post நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 70 அப்பாவி மக்கள் பலி, 280 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Rafah ,Hamas ,Gaza ,Dinakaran ,
× RELATED காசா மக்களின் உயிர்நாடியாக...