×

சைக்கிளிங் சென்றபோது இன்டெல் நிறுவன முன்னாள் தலைவர் கார் மோதி பலி

மும்பை: கார் மோதிய விபத்தில் சைக்கிளிங் சென்ற இன்டெல் நிறுவன மாஜி தலைவர் அவ்தார் சைனி பலியானார். மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்த அவ்தார் சைனி(68). இன்டெல் நிறுவன மாஜி தலைவரான இவர், 3 வகையான மைக்ரோ பிராசசரை வடிவமைத்து உள்ளார். நேற்று காலை 5.50 மணியளவில் சைக்கிளிங் சென்றுள்ளார். நெரூல் பகுதி பால்ம் பீச் ரோட்டில் வந்த சைனியின் சைக்கிள் மீது, கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சைனி பலத்த காயமடைந்தார். அவருடன் சைக்கிளிங் சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சைனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சைக்கிளிங் சென்றபோது இன்டெல் நிறுவன முன்னாள் தலைவர் கார் மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Intel ,CEO ,Mumbai ,Avtar Saini ,Chembur, Mumbai ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்