×

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்

சென்னை: உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று காலையிலிருந்து உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்குகளின் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று நீதியரசர் சந்திரன் ஆர்வம் காட்டுவதாக போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர். வழக்கின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கபட்டால் வேலை வாய்ப்புகல் பெருகும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு ஒன்றிய அரசு நிறைவேற்றும் வரை போராட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajaratnam Stadium, Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...