×

கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட அறிவியல் கண்காட்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மூலம் நம் நாட்டினை முன்னேற்றும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கொடைக்கானலில் உள்ள 23 பள்ளிகளை சேர்ந்த 200கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். இதில் அறிவியல் சார்ந்த பேச்சுபோட்டி, ஓவிய போட்டி, வினா விடை, மற்றும் செயல் விளக்கத்தோடு கூடிய இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில் இரயில் தண்டவாளத்தில் யாரேனும் மாட்டிக்கொண்டால் அலாரம் ஒலிக்க கூடிய மாதிரி, சந்திராயன் விண்கலம், ஆதித்யா எல் 1, நிலத்தை உழுவும் ரோபர்ட் , காந்தத்தினால் இயக்கப்படும் கார்கள், விவசாய நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் உள்ளிட்ட பல வகையான அறிவியல் சார்ந்து கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டது, மேலும் அதன் செயல் விளக்கத்தோடு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் விளக்கி கூறினார்கள்.

அதன் பின்னர் அறிவியல் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளிள் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பான கருவிகள் உருவாக்கிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியினை பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என 500க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து சென்றனர்.

The post கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : International Science Day ,Kodaikanal Meteorological Research Station ,Dindigul ,Meteorological Research Station ,Kodaikanal Observatory ,Kodaikanal ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...