×

பழங்குடிப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கைது

மேற்குவங்கம்: பழங்குடிப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காளி கிராமத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து 55 நாட்களாக தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த 1 அரை மாதமாக நடைபெறும் தொடர் போராட்டத்திற்கு வித்திட்ட சந்தேஷ்காளி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 55 நாட்களுக்கு பிறகு வடக்கு 24 பர்னாகாஸ் மாவட்டத்தில் ஷாஜஹான் ஷேக்கை போலீசார் கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரசில் செல்வாக்கு மிகுந்த நபரான ஷாஜஹான் ஷேக் வீட்டுக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை இட சென்றனர்.

அப்போது ஷாஜஹான் ஆதரவாளர்களான கிராமமக்கள் திரண்டு வந்து தாக்கியதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பலருக்கு மண்டை உடைந்தது. இந்த வழக்கில் ஷேக் தலைமறைவான நிலையில் அவர் மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் சந்தேஷ்காளி என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார்களை கோரியது மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஷாஜஹான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிலா அபகரிப்பிலும் ஈடுபட்டனர் என்பது மற்றொரு புகாராகும். ஷாஜகானை கைது செய்யாமல் இருந்ததற்கு மம்தா பானர்ஜி அரசுக்கு கொல்கத்தா நீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இந்த சூழலில் ஷாஜஹான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் கைது செய்யலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பழங்குடிப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,West Bengal ,Shah Jahan Sheikh ,Sandeshkali ,
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி