டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையால் கொட்டப்பட்ட கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கில் இறுதி விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
The post ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு: சுற்றுசூழல் ஆர்வலர்கள் appeared first on Dinakaran.