×

தருமபுரம் ஆதீன மடாதிபதியை மிரட்டி பணம் கேட்ட வழக்கு: பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடாதிபதியை மிரட்டி பணம் கேட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறையிலுள்ள பிரசித்திபெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது சன்னிதானமாக தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்து வருகிறார். கடந்த 3 மாதமாக ஆதீனத்தை மிரட்டுவதாகவும், ஆதினத்திடம் பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் ஒரு கும்பல் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி அகோரம் உட்பட 9 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் மயிலாடுதுறை பாஜக மாவட்ட செயலர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலர் வினோத் உள்ளிட்ட 4 பேர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைது செய்தவர்களை காவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இத்தகைய பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தருமபுரம் ஆதீன மடாதிபதியை மிரட்டி பணம் கேட்ட வழக்கு: பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Atheena ,BJP ,Mayiladuthurai ,Dharumapuram ,Darumapuram ,
× RELATED மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீஸ்வரர்...