×

நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளில் மீண்டும் போட்டியா?.. திமுக உடனான 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி. பேட்டி

சென்னை: எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க.வுக்கு ஏற்கனவே தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், வீரபாண்டியன், பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். திமுக உடனான 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப்பராயன் எம்.பி.; கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

The post நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளில் மீண்டும் போட்டியா?.. திமுக உடனான 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nagai ,Tirupur ,Subparayan ,DMK ,Chennai ,K. Subparayan ,DMK alliance ,IUML ,Communist Party of India ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...