×
Saravana Stores

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மதுரையில் உள்ள செவிலியர் கல்லூரியில் இடம் ஒதுக்க நிர்வாகம் முடிவு

மதுரை: தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்டகால கனவாக இருந்தது. இதன் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் அதிநவீனமான அமைக்கப்படும் என தெரிவிக்கபட்டது.

அந்த அடிப்படையில், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ஜப்பானில் இருக்க கூடிய ஜெய்கா நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கபட்டது. ஆனால் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை சுற்று சுவர் மட்டுமே கட்டப்பட்டு முழுமையாக அந்த இடம் எந்த வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

3ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கொடுக்கபட்ட அழுத்தத்தின் காரணமாக எய்ம்ஸ் மருத்தமனைக்கான மானவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவகல்லூரியில் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகள் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அங்கு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் இதற்காக டெண்டர் வெளியிடபட்டு, மதுரையை சேர்ந்த பகுதியில் ஒரு நர்ஸிங்கல்லூரியை இதற்காக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாடகை கட்டிடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகளையே எய்ம்ஸ் நிர்வாகமும், ஒன்றிய அரசும் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டபாடுவருகிறது.

The post மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மதுரையில் உள்ள செவிலியர் கல்லூரியில் இடம் ஒதுக்க நிர்வாகம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS Medical College ,Madurai College of Nursing ,Madurai ,AIIMS ,Tamil Nadu ,Narendra Modi ,AIIMS Hospital ,Dhoppur ,Nursing College ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில்...