×

வைக்கோல் எரிந்து முதியவர் பலி

திருவாடானை, பிப். 29: திருவாடானை அருகே தெருவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (87). இவர் தனக்கு சொந்தமான வயலில் உள்ள வைகோலை தீ வைத்து எரித்துள்ளார். வைக்கோலில் பற்றிய தீ காற்றின் வேகத்தால் அதிகரித்து கொழுந்து விட்டு எரிய துவங்கி உள்ளது வயலின் அருகே குடியிருப்பு பகுதி இருப்பதால் பதறிப் போன முதியவர் தீயை அணைக்க போராடி உள்ளார். இதில் மயக்கம் அடைந்து தீயில் விழுந்து சம்பவ இடத்திலேயே கருகி பலியானார். இது குறித்து திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து காளிமுத்துவின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

The post வைக்கோல் எரிந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Kalimuthu ,Theruvakkottai ,Dinakaran ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...