×

கோபி நகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கோபி,பிப்.29: கோபி நகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குள்ளம்பாளையம் பிரிவில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் நகரம், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக திமுக சார்பில் நிர்வாகிகள் மற்றும் வாக்குசாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோபி நகர திமுக சார்பில் வார்டு கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான என்.ஆர்.நாகராஜ் தலைமையில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், கோபி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளரும், மாநில நெசவாளர் அணி செயலாளருமான சச்சிதானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தல் ஆலோசனைகளை வழங்கினர்.

மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் பேசும்போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள கோபி, பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்ற அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கி அதிக வாக்குகளைப்பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய தொகுதி பொறுப்பாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் குறித்தும், எவ்வாறு செயல்பட வேண்டும் எனபது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் இலக்கிய அணி நிர்வாகி குமணன், துணைச்செயலாளர்கள் சரோஜா, ராஜாமணி, பொருளாளர் சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளரும், திட்டகுழு உறுப்பினர் மற்றும் கோபி நகராட்சி கவுன்சிலருமான விஜய் கருப்புசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் காளீஸ்வரன், பரமேஷ்வரன்,கவுதம், மகேஷ்வரி,மாவட்ட பிரதிநிதிகள் அய்யாசாமி, சவுகத் அலி, கிளைச் செயலாளர் செந்தில்குமார் சரவணன், மணிகண்டன், ஸ்ரீதர், குப்புசாமி, மதியழகன், கிருஷ்ணன், சண்முகம், ஆனந்தன், விசுவநாதன், கனகராஜ்,மலரவன், ஜெய்கணேஷ், மோகன், ரமேஷ்குமார், பாலகுமார், துரைசாமி, ஈஸ்வரன்,ஜோசப், ராஜா, பூபதி, கருணாகரன், முருகநாதன், ராஜ்குமார், சக்திவேல், செல்வம், கவுன்சிலர்கள் குமார சீனிவாசன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோபி நகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gobi ,City DMK ,Gobi city DMK ,Kullampalayam ,Erode North District DMK ,Parliamentary Elections ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு சாவு