×

ஒன்றிய அரசை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 29: கரூர் – கோவை ரோட்டில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு இன்சூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின் படி நேற்று நாடு முழுவதும் ஒரு மணி நேரம் வேலை வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் அடிப்படையில் கரூரில் அனைத்து அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து வலிமையான ஒரு நிறுவனத்தை உருவாக்கிட வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை வங்கிகளை போல் 30% ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தில் நிறுவன பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்திட வேண்டும்.

01.08.2022 முதல் நிலுவையிலுள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே துவக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் – கோவை ரோட்டில் உள்ள யுனைடெட் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் நலச்சங்கம் சார்ந்த தலைவர்கள், பென்ஷனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : General Insurance ,Union Government ,Karur ,United India Insurance ,Karur – Coimbatore road ,central government ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...