×

அதிமுக ஒன்றிய குழு தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்

திருவள்ளூர், பிப். 29: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில் அதிமுக ஒன்றியக் குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில் 6 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில், திருவள்ளூர் நகராட்சியை சேர்ந்த 4வது வார்டு கவுன்சிலர் நீலாவதி, 7வது வார்டு கவுன்சிலர் பிரபு, 11வது வார்டு கவுன்சிலர் வி.இ.ஜான், 12வது வார்டு கவுன்சிலர் தாமஸ், 17வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன், 18வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா நரேஷ் ஆகிய 6 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில் நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், அதிமுகவை சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில், திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்த 4வது வார்டு கவுன்சிலர் நீலாவதி, 7வது வார்டு கவுன்சிலர் பிரபு, 11வது வார்டு கவுன்சிலர் வி.இ.ஜான், 12வது வார்டு கவுன்சிலர் தாமஸ், 17வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன், 18வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா நரேஷ் ஆகிய 6 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.

அதுபோது, பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், எம்எல்ஏ, ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் பழனி, ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முகம், திருவள்ளூர் நகரச் செயலாளர் தி.சு.ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் உதயமலர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அதிமுக ஒன்றிய குழு தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : AIADMK union committee ,DMK ,Thiruvallur ,President ,Ranjitha Abhavanan ,Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...