- தூத்துக்கோரின் பள்ளி
- தூத்துக்குடி
- தூத்துக்கோரின் வேலவன் வித்தியாலயா பள்ளி
- ஒலிம்பிக்
- தங்கவேல் நாதர்
- அண்ணா புஷ்பம்
- தூத்துக்குடி பள்ளி தடகள போட்டி
- தின மலர்
தூத்துக்குடி, பிப். 29: தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான 2ம் ஆண்டு தடகளப் போட்டிகள் நடந்தது. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன் பள்ளி தாளாளர் தங்கவேல் நாடார், அன்ன புஷ்பம் ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் ஷகிலாஆனந்த் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக அன்னை ஜூவல்லர்ஸ் உரிமையாளர் முருகானந்தம் பங்கேற்று பேசினார்.இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டப் பந்தயம், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட உடற்கல்வி அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மண்டல அலுவலர் ஆனந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக். பள்ளி தட்டிச் சென்றது. போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தடகள போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, அன்னை ஜூவல்லர்ஸ் செய்திருந்தது.
The post தூத்துக்குடி பள்ளியில் தடகளப் போட்டி appeared first on Dinakaran.