வானூர், பிப். 29: ஆரோவில் சர்வதேச நகரின் உதயதினத்தையொட்டி நேற்று அதிகாலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகள் அங்குள்ள திறந்தவெளி கலையரங்கில் நெருப்பு மூட்டி தியானத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் ஆரோவில் சர்வதேச நகரம் மகான் அரவிந்தரின் சீடரான ஸ்ரீ அன்னையின் கனவு நகரமாக 1968ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எந்த ஒரு நாட்டினருக்கும் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள முடியாத ஒரு பொது இடமாக அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் நினைத்ததின்பேரில் இப்பகுதியில் மாத்ரி மந்திர் என்று அழைக்கப்படும் அன்னையின் ஆலயமான உலக உருண்டை வடிவில் தியான மண்டபமும்.
திறந்தவெளி கலையரங்கமும் (ஆம்பி தியேட்டர்)
121 நாடுகளில் இருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களில் இருந்தும் புனித மண் எடுத்து வரப்பட்டு தாமரை மொக்கு வடிவில் அமைக்கப்பட்டது. இங்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.இந்நிலையில் ஆரோவில் சர்வதேச நகரம் உருவான 56ம் ஆண்டுவிழா மாத்ரி மந்திர் திறந்தவெளி கலையரங்கில் நேற்று அதிகாலை கொண்டாடப்பட்டது. இதில் ஆரோவில்வாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கூட்ட அரங்கில் போன் பயர் எனப்படும் நெருப்பு மூட்டி தியானத்தில் ஈடுபட்டனர். இதற்காக திறந்தவெளி கலையரங்கப்பகுதியில் மலர்களால் அலங்கரித்து தீபமேற்றி வைத்திருந்தனர். மேலும் ஆரோவில்லின் முக்கியமான பகுதியான பாரத் நிவாஸ், சாவித்திரி பவன் உள்ளிட்ட பகுதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
The post ஆரோவில் உதயதின விழாவில் நெருப்பு மூட்டி திறந்த வெளி கலையரங்கில் தியானம் வெளிநாட்டினர், ஆரோவில் வாசிகள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.