×

உச்சப்பட்டி ஊராட்சி பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

திருமங்கலம், பிப்.29: திருமங்கலத்தினை அடுத்த உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சர்.சி.வி.ராமன் விளைவு கண்டு பிடித்த தினமான பிப்.28ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று இதனையொட்டி உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ,மாணவிகள் இதனையொட்டி சர் சி.வி.ராமன் முகமூடி அணிந்து பல்வேறு அறிவியல் சோதனைகளை செய்து காட்டினர். நிகழ்ச்சியை பள்ளி மேலாண்மைக் குழுவினரும், ஆசிரியர்களும், சக மாணவர்களும் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சாந்தி, ஆசிரியர்கள் ரேவதி, ஷேக்மைதீன், கண்ணன் செய்திருந்தனர்.

The post உச்சப்பட்டி ஊராட்சி பள்ளியில் தேசிய அறிவியல் தினம் appeared first on Dinakaran.

Tags : National Science Day ,Uchpatti Orati School ,Thirumangalam ,Uachpatti Union ,Secondary ,School ,Thirumangala ,C. V. National Science Day ,Uchpatti ,Orati ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...