×

திண்டுக்கல்லில் மாவட்ட ஹாக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

திண்டுக்கல், பிப். 29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான சீனியர் பெண்கள் ஹாக்கி போட்டி மார்ச் 1ம் தேதி முதல் 5.ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் திண்டுக்கல் மாவட்ட அணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு கமிட்டியில் மாவட்ட தலைவர் நாட்டாமை காஜா மைதீன், துணை தலைவர்கள் ரமேஷ் பட்டேல், ஞானகுரு, செயலாளர் ராமானுஜம், பொருளாளர் விக்டர் ராஜ், துணை செயலாளர் மகேஸ்வரன், பயிற்சியாளர் பிரிட்டோ ஆகியோர் தேர்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட வீராங்கணைகள் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக நிஷாந்தினி, சத்தியப்பிரியா, ஷர்மிலா, கேத்தரின் பவுசியா, கவி வெண்ணிலா, சன்மதி, ரெக்சிலின் திவ்யா, நாகேஸ்வரி, புவனேஸ்வரி, சில்வியா, பாண்டியம்மாள், மணிமேகலா, ஜனனி, கோகிலா, திவ்யா, கோமதி, ராஜராஜேஸ்வரி, சவுமியா, முனியம்மாள், அனுசியா ஆகி 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post திண்டுக்கல்லில் மாவட்ட ஹாக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : hockey ,Dindigul ,State Level Senior Girls Hockey Tournament ,Krishnagiri District ,Dindigul district ,district hockey team ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...