×
Saravana Stores

கூகுள்-பே, போன் பே மூலம் செலுத்தலாம் அரசு பஸ்களில் மின்னணு பயணச்சீட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டு (இ-டிக்கெட்) வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டிற்காக பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பேருந்து நடத்துநர்கள் மின்னணு டிக்கெட் இயந்திரம் வாயிலாக பயணிகளிடம் ரொக்கப் பணம், கார்டு மற்றும் யு.பி.ஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். அதன்படி, பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். இந்தவிழாவில், கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கூகுள்-பே, போன் பே மூலம் செலுத்தலாம் அரசு பஸ்களில் மின்னணு பயணச்சீட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Adyanidhi Stalin ,CHENNAI ,YOUTH WELFARE AND SPORT DEVELOPMENT ,RS 20 CRORE ,KINDI, CHENNAI ,CENTENARY ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை; அவசர...