×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டத்தில் ரூ.122 கோடி செலவில் நெல் சேமிப்பு தளங்கள், கிடங்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: தமிழகம் முழுவதும் 6 மாவட்டங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள், செயல்முறை கிடங்குகள் ரூ.122.50 கோடி செலவில் கட்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டத்தில் ரூ.4.02 கோடி செலவில் 2000 மெ.டன், செங்கல்பட்டு மாவட்டம் தொன்னாடு, காஞ்சிபுரம் மாவட்டம் மருதம் என மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், ரூ.9.17 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கொத்தங்குடியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 9000 மெ.டன், மற்றும் நீலத்தநல்லூரில் ரூ.8.86 கோடி மதிப்பீட்டில் 13,500 மெ.டன், திருவாரூர் மாவட்டம், மூவாநல்லூரில் ரூ20.90 கோடி மதிப்பீட்டில் 33,000 மெ.டன், கடலூர் மாவட்டம், டி.புடையூரில் ரூ.9.23 கோடி மதிப்பீட்டில் 9500 மெ.டன், செங்கல்பட்டு மாவட்டம், சிலாவட்டத்தில் ரூ.14.42 கோடி மதிப்பீட்டில் 15,000 மெ.டன், காஞ்சிபுரம் மாவட்டம், கட்டவாக்கத்தில் ரூ.14.42 கோடி மதிப்பீட்டில் 15,000 மெ.டன், மதுரை மாவட்டம், திருவாதவூரில் ரூ.14.42 கோடி மதிப்பீட்டில் 15,000 மெ.டன் மற்றும் வாடிப்பட்டியில் ரூ.6.73 கோடி மதிப்பீட்டில் 7000 மெ.டன் கொள்ளளவு, என மொத்தம் ரூ.95 கோடி மதிப்பீட்டில் 1.17 லட்சம் மெ.டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள 40 எண்ணிக்கையிலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள், திருவள்ளூர் மாவட்டம், ராமகிருஷ்ணராஜ்பேட்டை வட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 2000 மெ. டன், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 3000 மெ. டன், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் 2500 மெ. டன் என மொத்தம் ரூ.27.50 கோடி மதிப்பீட்டிலான 15,000 மெ. டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்குகள் என மொத்தம் ரூ.122.50 கோடி மதிப்பில் 6 மாவட்டங்களில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் மற்றும் 6 வட்ட செயல்முறை கிடங்குகள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டத்தில் ரூ.122 கோடி செலவில் நெல் சேமிப்பு தளங்கள், கிடங்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Kanchipuram ,Chengalpattu ,CHENNAI ,M.K.Stalin ,Tamil Nadu ,Sivagangai district ,Kalaiyar temple ,CM ,
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...