×

மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக தமிழர் நியமனம்

மும்பை: மக்களவை தேர்தல் நெருங்குகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிடப்பட்டது. எஸ்.சொக்கலிங்கம், 1996ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக தமிழர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Maharashtra ,Mumbai ,Lok Sabha ,Election Commission ,S. Sokkalingam ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்