×

புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் பைனலில் விளையாட புனேரி பல்தான் அணி தொடர்ந்து 2வது முறையாக தகுதி பெற்றது. ஐதராபாத் ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நேற்று நடந்த முதல் அறையிறுதியில் புனேரி பல்தான் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் 5 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகள் குவித்து 5-5 என சமநிலை வகித்தன. 10வது நிமிட முடிவில் புனே 9-8 என முன்னிலை பெற்றதுடன், 16வது நிமிடத்தில் பாட்னாவை ஆல் அவுட் செய்தது. அதனால் இடைவேளையின்போது புனே 20-11 என வலுவான முன்னிலை பெற்றது.
2வது பாதியின் 2வது நிமிடத்தில் பாட்னா முதல் புள்ளியை பெற, புனே முதல் புள்ளியை பெற 5 நிமிடங்கள் ஆனது. எனினும், அபினேஷ் நடராஜனின் அமர்க்களமான ஆட்டத்தால் அடுத்த 2 நிமிடங்களில் பாட்னாவை மீண்டும் ஆல் அவுட் செய்து அசத்தியது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் புனேரி பல்தான் 37-21 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது.

The post புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான் appeared first on Dinakaran.

Tags : Puneri Paltan ,Pro Kabaddi League series ,Hyderabad ,Puneri Paldan ,Patna Pirates ,Hyderabad GMC Balayogi Arena ,Pro Kabaddi League Series Final ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...