×

மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டித்து கமாண்டோக்கள் துப்பாக்கிகளை தரையில் வைத்து போராட்டம்

மணிப்பூர்: மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டித்து போலீஸ் கமாண்டோக்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு இம்பால் மாவட்ட கூடுதல் எஸ்.பி. மொய்ரங்தெம் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

மெய்தி தீவிரவாதிகள் 200 பேர் கூடுதல் எஸ்.பி. வீட்டைத் தாக்கி மொய்ரங்தெம் அமித்தையும் காவலர் ஒருவரும் கடத்தப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி, கூடுதல் எஸ்.பி. காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காவல் கண்காணிப்பாளர் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மணிப்பூர் போலீசார் கூறுகையில்; “கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கடத்தப்பட்ட சம்பவம் அறிந்ததும் சிறப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அவரை மீட்டனர். காவல் அதிகாரி நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 200 பேர் கொண்ட ஆயுத கும்பல் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டனம் தெரிவித்தும், ஆயுத கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கக் கோரியும் மாநில காவல்துறையினர் துப்பாக்கிகளை தரையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் சற்று பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

The post மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டித்து கமாண்டோக்கள் துப்பாக்கிகளை தரையில் வைத்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Additional SP ,Manipur ,SP ,West ,Imphal ,District ,Additional S.P. Militants ,Moirangthem house ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...