×

ரிவர்ஸ் ஸ்விங்கை ஜாகீர் கானிடமிருந்து கற்றுக்கொண்டேன்: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

டெல்லி: ரிவர்ஸ் ஸ்விங் உட்பட வேகப்பந்து வீச்சின் சில நுணுக்கங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கானிடமிருந்து, தான் கற்றுக்கொண்டதாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 980க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற மைல்கல்லை ஜேம்ஸ் ஆண்டர்சன் அடைய உள்ளார். மார்ச் 7ம் தேதி தொடங்க இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 698 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளார்.800 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 2வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் ரிவர்ஸ் ஸ்விங் உட்பட வேகப்பந்து வீச்சின் சில நுட்பங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கானிடமிருந்து, தான் கற்றுக்கொண்டதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். “என்னைப் பொறுத்தவரை, ஜாகீர் கான் நான் நிறைய பார்த்து கற்றுக் கொள்ள முயற்சி செய்தேன். அவர் எப்படி ரிவர்ஸ் ஸ்விங்கைப் பயன்படுத்தினார்.

அவர் பந்துவீசும்போது, எவ்வாறு பந்தை பிடிக்கிறார் என்பது போன்ற பந்துவீச்சு நுணுக்கங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதை நான் பின்பற்ற முயற்சி செய்தேன்” என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

The post ரிவர்ஸ் ஸ்விங்கை ஜாகீர் கானிடமிருந்து கற்றுக்கொண்டேன்: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் appeared first on Dinakaran.

Tags : Zaheer Khan ,James Anderson ,Delhi ,England ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...