×

தேன் நெல்லி

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் – 10
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய வெல்லம் – 1 கப்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

நெல்லிக்காயைக் கழுவி நீரில்லாமல் சுத்தமாக துடைத்துக்கொள்ளவும். பின்பு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு (அடுப்பை குறைந்த தணலில் வைத்து) நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் நன்றாக வதங்கியதும், இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் நெல்லிக்காயை ஊசியால் இரண்டு மூன்று இடங்களில் குத்தி விடவும். துருவிய வெல்லத்தை 1/4 கப் நீர் விட்டு கம்பிப்பதம் பாகு வைத்து இறக்கவும். ஆறியதும் தேன் சேர்த்து நெல்லிக்காய் சேர்த்து கலந்துவிடவும். இந்தத்தேன் நெல்லிக்காய் வெளியில் வைத்தால் குறைந்தபட்சம் 2 வாரங்கள் வரையிலும், ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரையிலும் கெடாது.

The post தேன் நெல்லி appeared first on Dinakaran.

Tags : Honey Nelly ,
× RELATED செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை