×

தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக தீவிரம்: நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தை இணைக்கவும் பேச்சுவார்த்தை நணப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடை பெறும் என கூறப்படுகிறது. அடுத்த ஓரிரு தினங்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

The post தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக தீவிரம்: நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : DIMUKA DIVIRAM ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA K. Stalin ,Dimuka Devaram ,Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட...