×

காரிச்சாங்குடி, வரதராஜபெருமாள் கட்டளை இடையே கோரையாற்றில் ரூ.3 கோடியில் இணைப்பு பாலம்

* பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது

* பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

நீடாமங்கலம் : காரிச்சாங்குடி, வரதராஜபெருமாள் கட்டளை இடையே கோரையாற்றில் ரூ.3 கோடியில் இணைப்பு பால பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியம் ரிஷியூர் ஊராட்சி வரதராஜபெருமாள கட்டளை, மேலாளவந்தச்சேரி ஊராட்சி காரிச்சாங்குடி இடையே இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து குறிப்பாக பெண்கள், மாணவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார். ஆண்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து, மேலும் பல திட்டங்களை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.அது மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் வியக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் மக்கள் நலன் கருதி மேம்பாலங்கள், சாலை வசதிகளையும் அதிக அளவில் படிப்படியாக செய்து முடித்து வருகிறார்.

இந்நிலையில் மேலாளவந்தச்சேரி, காரிச்சாச்குடி, மடப்புரம், சமுதாயக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நீடாமங்கலம் வந்து தஞ்சாவூர்,திருச்சி, கும்பகோணம் செல்ல வேண்டுமானால் ராஜப்பையன் சாவடி, பூவனூர் வழியாக நீடாமங்கலம் வந்து தான் செல்ல வேண்டும்.இதேபோல ரிஷியூர், முல்லைவாசல் ,பெரம்பூர், கட்டையடி வரதராஜ பெருமாள் கட்டளை மக்கள் மன்னார்குடி செல்ல வேண்டுமானால் நீடாமங்கலம் அல்லது ராஜப்பையன் சாவடி வந்து அங்கிருந்து தான் மன்னார்குடி பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும்.

ஆனால், தற்போது வரதராஜபெருமாள் கட்டளை, காரிச்சாங்குடி இடையே நபார்டு திட்டத்தில் ரூ.3.42 கோடிக்கு கோரையாற்றின் குறுக்கே தற்போது பணிகள் தொடங்கி மும்முரமாக நடை பெற்று வருகிறது. பாலத்தின் பணி நிறைவடைந்தால் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதில் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த வாய்ப்பை உருவாக்கி தந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, உறுதுணையாக இருந்து பல ஆண்டு காலம் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த ஒன்றிய தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய ஆணையர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி தலைவர்கள்,மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்து நன்றி கூறினர்.மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு கட்டப்படும் இந்த பாலம் திடமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றனர்.

The post காரிச்சாங்குடி, வரதராஜபெருமாள் கட்டளை இடையே கோரையாற்றில் ரூ.3 கோடியில் இணைப்பு பாலம் appeared first on Dinakaran.

Tags : Karichangudi ,Varadarajaperumal ,Korai River ,Needamangalam ,Koraiyar ,Varadarajaperumal Command ,
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு