×

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த 23ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடி வருகின்றனர்.

இதன்படி நேற்று நடந்த 5வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி 8 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளுக்கு பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பெவிலியன் நோக்கி சென்ற வண்ணம் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹேமலஹா 31 ரன்களும், தியோல் 22 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனை சோஃபி டிவைன் 6 ரன்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய மேஹனா மற்றும் மந்தனா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 12.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி புல்லிபட்டியலில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது.

The post மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Women's Premier League ,Bengaluru ,Gujarat Giants ,Delhi Capitals ,Mumbai Indians ,Royal Challengers Bangalore ,UP Warriors ,Dinakaran ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...