×

பொறுப்பு அதிகாரிகள் ஆய்வு பிளஸ்2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கும்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளதையடுத்து தேர்வு மையங்களில் பொறுப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில், கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள சாந்தோம் பகுதியில் உள்ள பள்ளியில் சென்னை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்த்தார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான அட்டவணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கடந்த நவம்பர் 16ம் தேதி சென்னையில் வெளியிட்டார். அதன்படி மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கின. பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு கடந்த 23ம் தேதி முதல் நாளை வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு 19ம் தேதி முதல் 24ம் தேதிவரையும், பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 12ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரையும் நடந்துள்ளன.

அதன்தொடர்ச்சியாக மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வும், மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8 வரை பத்தாம் வகுப்பு தேர்வுகளும் தொடங்க இருக்கின்றன. இதையடுத்து, கடந்த ஆண்டைப் போலவே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மே 6ம் தேதி பிளஸ் 2, 14ம் தேதி பிளஸ்1, 10ம் தேதி பத்தாம் வகுப்புக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வுகள் காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கும். அனைத்து தேர்வுகளிலும் கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் குறிக்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்வுகள் எந்த குளறுபடியும் இல்லாமல் நடத்த வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் 38 தேர்வு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தேர்வுப் பொறுப்பாளர்களாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். அங்கு தேர்வு மையங்கள், கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் பார்த்து வருகின்றனர். அதன் ெதாடர்ச்சியாக சென்னையில் உள்ள மையங்களை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே பார்வையிட்டார். சாந்தோம் மேனிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

The post பொறுப்பு அதிகாரிகள் ஆய்வு பிளஸ்2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கும் appeared first on Dinakaran.

Tags : Plus2 general election ,Chennai ,Santhom ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...