×

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி ஆண்டு விழா

திருத்துறைப்பூண்டி, பிப். 28: திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமையிலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குமுதம், பள்ளி மேலாண்மை குழு தலைவி மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் நகர்மன்றத் தலைவி கவிதா பாண்டியன் கலந்து கொண்டு இலக்கிய மன்ற போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். ஆசிரியை வாசுகி வரவேற்றார். ஆண்டு அறிக்கையை ஆசிரியர் முத்துக்குமரன் வாசித்தார். உடற்கல்வி ஆசிரியர் பாமிலா நன்றி கூறினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நெடும்பலம் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு, கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவியரசன், மேலாண்மை குழு துணை தலைவி சரஸ்வதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ் குமார், சரவணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட பெற்றோர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சிங்காரவேலு தொகுத்து வழங்கினார்.

The post திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi Govt School Annual Celebration ,Thirutharapoondi ,Tiruthurapoondi Government Girls Higher Secondary School ,Headmaster ,Kalachelvi ,Parent Teacher Association ,President ,Marimuthu ,Retired ,Kumutham ,Chairperson ,Maheshwari ,Thiruthurapoondi Government School ,
× RELATED கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்..!!