×

காரைக்கால் கடற்கரையில் காவல்நிலைய பூத் அமைக்கும் பணி

காரைக்கால், பிப். 28: காரைக்கால் கடற்கரையில் தினகரன் செய்தி எதிரொலியால் காவல்நிலைய பூத் அமைக்கும் பணியை எஸ்எஸ்பி மணீஸ் தொடங்கி வைத்தார். காரைக்கால் கடற்கரை சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் காரைக்கால் கடற்கரைக்கு வந்து செல்லவதை வழக்கமாக கொண்டுள்ளனர். காரைக்கால் கடற்கரைக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பேனர்கள் மற்றும் விதிமுறைகளை மீறி கடற்கரையில் ஆர்வ மிகுதியால் ஆழமான பகுதிக்கு செல்ல முற்படுகின்றனர்.

நீச்சல் தெரிந்தாலும் அலையில் சிக்கி கொண்டு மீள முடியாமல் தவித்து இறப்பு சம்பவம் நடந்து வருகிறது. எனவே காரைக்கால் கடற்கரையில் மாவட்ட காவல்துறை சார்பில் கடற்கரை காவல் நிலைய பூத் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக தினகனரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக மாவட்ட ரோட்டரி கிளப் சார்பில் காரைக்கால் கடற்கரையில் காவல் நிலைய பூத் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. முதுநிலை எஸ்எஸ்பி மணீஷ் பங்கேற்று பூமிபூஜையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post காரைக்கால் கடற்கரையில் காவல்நிலைய பூத் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Karaikal beach ,Karaikal ,SSP ,Manis ,Dinakaran ,Tirunallaru Shani Bhagavan Temple ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...