×

வேளாங்கண்ணி வடக்குபொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

நாகப்பட்டினம்,பிப்.28: மாசி மக பிரமோற்சவ விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி அருகே வடக்குபொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேளாங்கண்ணி அருகே வடக்கு பொய்கைநல்லூரில் பழமை வாய்ந்த நந்திநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாசி மக பிரமோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகி அம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர்.

சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வர்ண விநாயகர் கோயிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

The post வேளாங்கண்ணி வடக்குபொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Oonchal Utsavam Kolagalam ,Nanthinadeshwarar Temple ,Velankanni Udakapoikainallur ,Nagapattinam ,Masi Maha Pramotsava festival ,Oonchal Utsavam ,North Poikainallur ,Velankanni ,Swami ,Velanganni ,Unchal Utsavam Kolakalam ,Velangkanni ,North Poikainallur Nanthinadeshwarar Temple ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...