×

அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு ஒரு சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றத்திறனாளிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் அரசு நேற்று டத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி ஆகியோர் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

The post அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Association of Blind College Students and Graduates ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...