- பாதுகாப்பு விழிப்புணர்வு
- பரமக்குடி
- சட்டமன்ற உறுப்பினர்
- பரமக்குடி எம்.எல்.ஏ
- முருகேசன்
- Paramakkudi
- ஆடைத் தொழிலாளர்கள் தினம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பரமக்குடி, பிப். 28: பரமக்குடியில் தையற்கலை தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் பிப்ரவரி 27ம் தேதி தையற்கலை தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பழனி, பொருளாளர் போலிங்கம், அல்ட்ரா டெய்லர் மகேந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமக்குடி ஐந்து முனைப்பகுதியில் தொடங்கிய இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முத்தாலம்மன் கோவில் படித்துரை அருகே நிறைவு பெற்றது.
பேரணையின் போது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, ராசி என் போஸ், திமுக மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் அய்லுக் சண்முகம், மற்றும் பெண் தையல் கலை தொழிலாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட தையற்கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் நகர் துணை அமைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினர்.
The post பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.