×

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சரிந்து வரும் முருங்கை விலை: கிலோ ரூ.60க்கு விற்பனை

 

மதுரை, பிப்.28: மதுரை காய்கறி மார்க்கெட்டில் முருங்கை விலை சரிந்து வருகிறது. கிலோ ரூ.120 வரை விற்ற முருங்கை, மெல்ல விலை குறைந்து நேற்று கிலோ ரூ.60க்கு சரிந்தது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விபரம்: கத்தரிகாய் கிலோ ரூ.20, வெண்டை ரூ.20, பாகல் ரூ.25, புடலை ரூ.25, மிளகாய் உருட்டு ரூ.30, மிளகாய் சம்பா ரூ.25, சீனி அவரைக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.30, சுரைக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.50, நைஸ் அவரை ரூ.40, பெல்ட் அவரை ரூ.30, பட்ட அவரை ரூ.60, மாங்காய் கல்லாமை ரூ.100, மாங்காய் நாடு ரூ.70, நெல்லி ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.40, பல்லாரி ரூ.35. கருவேப்பிலை கிலோ ரூ.80, புதினா ரூ.20, மல்லி ரூ. 30, இஞ்சி ரூ.120.

கேரட் கிலோ ரூ.40, சோயா ரூ.80, பட்டர் பீன்ஸ் ரூ.100, ஜெர்மன் பீன்ஸ் ரூ.50, ரிங் பீன்ஸ் ரூ.50, பட்டாணி ரூ.100, சவ்சவ் ரூ.20, குடை மிளகாய் ரூ.60, பஜ்ஜி மிளகாய் ரூ.60, பீட்ருட் ரூ.40, முள்ளங்கி ரூ.20, மொச்சை ரூ.70, டர்னிப் ரூ.40, நூக்கல் ரூ.40, சேனை ரூ.50, சேம்பு ரூ.70, கருணை ரூ.40, உருளை ரூ.40, பாகல் சிறியது ரூ.120, முட்டைகோஸ் ரூ.30, கோவக்காய் ரூ.30.மார்க்கெட்டில் தக்காளி 15 கிலோ கொண்ட பெட்டியின் விலை ரூ.130 முதல் ரூ.180 வரை. சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை உள்ளது. முருங்கைக்காய் கிலோ ரூ.60. கடந்த வாரம் கிலோ ரூ.120 வரை விற்ற நிலையில், தற்போது மெல்ல இதன் விலை சரிந்து கிலோ ரூ.60க்கு வந்துள்ளது.

The post மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சரிந்து வரும் முருங்கை விலை: கிலோ ரூ.60க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Mattuthavani ,Madurai ,Dinakaran ,
× RELATED பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.12...