×

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய முஸ்லிம் பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட முஸ்லிம் பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் 9566239685, 6379179200, 044-22505886, 044-22502267 என்ற எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சுயவிவர விண்ணப்பம், கல்லூரிச்சான்றிதழ், பாஸ்போர்ட், மற்றும் பணி அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை 29ம் தேதிக்குள்(நாளை) அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இடைத்தரகரோ, ஏஜென்டோ கிடையாது என்பதால், நேரிடையாக பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய முஸ்லிம் பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Arabian ,Tamilnadu Govt ,Chennai ,Tamil ,Nadu ,Government Foreign Employment Agency ,Managing Director ,C. N. Maheswaran ,Ministry of Saudi Arabia ,Government of Tamil Nadu Information ,
× RELATED தென்தமிழகம், கேரளா உள்பட...