×

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

தாம்பரம்:தாம்பரம் அருகே திருவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. தம்பதியின் மகன் தீனா (6), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் மாலை குமார், வீட்டின் அருகிலுள்ள கடைக்கு புறப்பட்டுள்ளார். இதை, சிறுவன் தீனா முதல் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளான்.

அப்போது, திடீரென முதல் மாடியிலிருந்து நிலை தடுமாறி சிறுவன் தவறி கீழே விழுந்துள்ளான். சத்தம்கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுவன் தீனா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தான்.

The post மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Kumar ,Thiruvancheri ,Chitra ,Deena ,Dina ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!