- மகா சிவராத்திரி விழா
- ஏர்வாடி அங்கல பரமேஸ்வரி கோயில்
- Airwadi
- மகா சிவராத்திரி
- அங்கல பரமேஸ்வரி அம்பல் கோயில்
- ஏர்வாடி போதையாடி
- தீபராதனா
- ஏர்வாடி அங்கல பரமேஸ்வரி கோயில்
ஏர்வாடி, பிப்.28: ஏர்வாடி பொத்தையடி அங்காள பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம் இன்று (28ம் தேதி) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக ஹோம பூஜைகள் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதைத்தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும். மார்ச் 7ம்தேதி இரவு முகம் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். மார்ச் 8ம்தேதி மகாசிவராத்திரியன்று காலை 10 மணிக்கு பால்குட ஊர்வலமும், மதியம் உச்சிக்கால பூஜையும், இரவு 9 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 11 மணிக்கு 2ம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு 3ம் கால பூஜையும், அதிகாலை 4மணிக்கு 4ம் கால பூஜையும் அதைத் தொடர்ந்து அலகு ஏந்தி நிற்கும் அற்புத காட்சியும் நடைபெறும். மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு படையல் பூஜை நடைபெறும்.
The post ஏர்வாடி அங்காள பரமேஸ்வரி கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.