×

ஜி.கே.வாசனை வரவேற்ற யுவராஜா: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கோவை: நடைபெறயிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் சென்னையில் அறிவித்தார். இதையடுத்து, தமாகா இளைஞரணி மாநில தலைவரான யுவராஜா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து பேசினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜவுடன் கூட்டணி அமைத்த அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமியை யுவராஜா சந்தித்தாக தகவல்கள் பரவியது. இதனால் அவர் அதிமுகவில் விரைவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பல்லடத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க யுவராஜா கோவை விமான நிலையம் வந்திருந்தார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி உடனான யுவராஜாவின் சந்திப்புக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The post ஜி.கே.வாசனை வரவேற்ற யுவராஜா: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி appeared first on Dinakaran.

Tags : Yuvaraja ,GK ,Coimbatore ,GK Vasan ,President ,Tamil State Congress Party ,Chennai ,BJP ,Tamaka ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Salem ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்