×
Saravana Stores

அபுதாபி இந்து கோயில் மார்ச் 1 முதல் பொது தரிசனம்

அபுதாபி: அபுதாபியில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் அபு முரீகா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்து கோயிலை பிரதமர் மோடி கடந்த 14ம் தேதி திறந்து வைத்தார். இதுவே அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கற்கோயிலாகும். பாப்ஸ் எனப்படும் சுவாமிநாராயண் அமைப்பு மூலம் கட்டப்பட்ட இக்கோயிலில் கடந்த 15ம் தேதி முதல் நாளை வரை முன்பதிவு செய்த வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் விஐபிக்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 1ம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் அதிகாரிகள் கூறி உள்னர். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். வாரந்தோறும் திங்கட்கிழமை கோயில் மூடப்பட்டிருக்கும் என கோயில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

The post அபுதாபி இந்து கோயில் மார்ச் 1 முதல் பொது தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Abu Dhabi Hindu Temple ,Abu Dhabi ,Modi ,Abu Mureeqa ,Al Rahba ,Dubai- ,Abu Dhabi Sheikh Zayed Highway ,Abu Dhabi… ,Hindu Temple ,
× RELATED கார் ரேஸில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்